ஒரு பார்வை பார்க்கின்றாய்

ஒரு பார்வை பார்க்கின்றாய்... முழு வாழ்வை தந்தேனே... இதழ் சுழித்து நீ சிரித்தாள்... தானாய் உன்முன் வருவேனே... மனப்பாடமாய் என் மனதை படிப்பாய்... செந்தாமரை விரலாலே என் விரல்கள் கோர்ப்பாய்...
உயிர் தேடும் உயிராக உயிர் நீயும் உறவாடி எனை மடியில் பார்ப்பாயே எந்நாளும் அழகாக ...
நிலவாக நீ மாறி என் இரவில் வருவாயே... நான் ஒன்றும் கேட்க்காமல் நீ அள்ளிதருவாயே...
நினைவாக உதயங்கள்..நிஜமாக இதையங்களில்.. இதமாக இசைக்கும் ஒலிகள்..இனம்புரியாத காதல் வலிகள்....!
இடம்பொருளறிந்து மின்கலங்கள் மின்சாரம் அளிக்கும்.. காதல்மொழி பேசும் ஆசை இதழை என் உதடுகள் ருசிக்கும்...!
மழையாக நினைப்பேன்..
மழலையாக அனைப்பேன்..
சிரித்தாய்! சிதைத்தாய்!
சிறையாய்! பிடித்தாய்!!!
கருங்கோந்தால் சரிந்தாலும்
கரம் அதை சரிசெய்தாலும்
இரண்டுமே கொள்ளை அழகு
அதுவே என்னை உலுக்கும் படகு !!!!!
தினம்தோறும் உன்பெயரை ஆயிரமுறையேனும் சொல்வேன் ..
இருந்தும் அது போதாமல்
என்முகவரியெனவும் கொல்வேன்...
மோதல் தரைப்புற்க்கள் தான்
காதல் உயிர் கண்கள் தான்..
அடியே !!அழகியே !!
கொடியே!! என் குருதியே !!
- கிருஷ் அரி