கருப்புச் சிலை அழகி
பிரம்மன் படைப்பு
*****************
உளிகள் இல்லாமல்
வலிகள் இல்லாமல்
அவளைச் செதுக்கி!
கருப்பு தேகத்தில்
சிரிப்பு மொழியெழுதி
மனதைக் கொள்ளையிட்டக்
கொள்ளைக்காரி அவள்!
இரவென தேகம் படைத்து
பகலெனப் பற்க்கள் படைத்து
அன்பால் அவள் சுவைக்க
பிரம்மன் படைத்த இன்னொரு
படைப்பாக நான்!