ஆசை
சக மனிதனுடன் சிரித்துப்
பழகத்தான் ஆசை!
உயிர் நண்பனுடன் இறுதி வரை
வாழத்தான் ஆசை!
முதல் காதலில் வெற்றி
பெறவும் தான் ஆசை!
ஓரிரவில் உச்சம் தொடவும்
தான் ஆசை!
இறுதிவரையில் மழலையாகவே
வாழ்ந்து விடவும் தான் ஆசை! இன்னலின்றி வாழ்வில்
வாழவும் தான் ஆசை!
ஆனால்
மனிதனாய் பிறந்ததால் என்னவோ- இவற்றை எல்லாம் ஆசை மட்டும் தான் பட
முடிந்தது!!!..
#Vidiyalai_Nokki_2_O