வேகம் வேண்டாம்
டமார்!
அந்த பைக்கின் 120கிமீ வேகபயணம் அத்தோடு முடிந்தது.பாவம் மணி புது மாப்பிள்ளை வேறு.திருமணம் ஆன கையோடு நண்பர்களுடன் மது விருந்துக்கு சென்று விட்டு வரும் போது லாரியின் மீது மோதி சரிந்தது அவனுடைய பைக்.அந்த கணத்தில் அவனுடைய உயிர் எமனால் பறிக்க பட்டு விட்டது.அங்கே அவனுடைய கடைசி ஆசையாக தன் தாயையும் மனைவியையும் காண வேண்டும் என்ற ஆசை நிறைவேற்ற பட்டது.அவனுடைய ஆன்மா பூலோகத்திற்கு பறந்து வந்தது.அவன் வந்த கணத்திலேயே அங்கே அவனுடைய தாயும் மனைவியும் அவனுடைய பிணத்தின் முன் அழும் குரல் கேட்டது.தன பிள்ளையை பரி கொடுத்த வேதனையில் அவள் அழுகுரல் விம்மி,விம்மி கேட்கின்றது."சாமி!என்னை அனாதையாய் விட்டுட்டு போய்டியே உன்னை எப்படி காண தான் பாலும் தின்னும் கொடுத்து உன்னை வளர்த்தேனா?என்று அழுகுரளில் திக்கி திக்கி வார்த்தைகளை கொட்டி கொண்டிருந்தாள்.அவளை விட பாவமாக இருந்தால் அவளின் மனைவி திருமணம் ஆகி முழுமையாக 1 நாள் கூட ஆகவில்லையே பாவம் அவளால் என்ன கூறி ஆழ முடியும்.தன் கணவனோடு அவள் இல்லறம் கண்டு வருங்கால நிகழ்ச்சிக்கானவைகளை அவள் என்னென்ன கற்பனை செய்து வைத்திருப்பாலோ!திருமணம் ஆனா நாளிலே கணவனை இழந்து விதைவை ஆவதை எந்த பெண் தான் தாங்கி கொள்ள முடியும்.அங்கே அவளுடைய அழுகுரல் மட்டுமே கேட்டது.இந்த சம்பவங்களை கண்டா அவனுடைய ஆன்மா கண்ணீர் துளி வடித்தது.நான் மது அருந்தி பைக்கில் அதிக வேகமாக சென்றததாலே தானே இவ்வுளவு ஏமாற்றங்களும் சோகங்களும் என்ற பழி உணர்ச்சி அவனை வருத்தியது. பாவம் அவன் மட்டும் என்ன செய்வான் எல்லாம் முடிந்து விட்டதே!அவன் வருந்தி கொண்டிருந்த சமயத்திலேயே அவனுக்கு கொடுக்க பட்ட கால அவகாசம் முடிந்து விட்டது.உடனே காலம் வந்து அவனை மேலோகதிற்கு அழைத்து சென்றான்.ஆனாலும் நடப்பதை மறந்து அவனுடைய குற்ற உணர்ச்சி அவனை வருத்தி கொண்டே இருந்தது.
சோக வரிகளுடன்
விபின்