தரிசனம்

நீ கோவிலை சுற்றுகிறாய்...
நான் உன்னை சுற்றுகிறேன்..
இரண்டும் ஒன்று தானே..!

உன் வேண்டுதல் என்ன? என்கிறாய்...
எனக்கென்னமோ
'என்ன வரம் வேண்டும் கேள்;
என்பது போலிருக்கிறது.

இன்னும் இன்னும் கவிதை சொல் என்கிறாய்.
இதற்கு மேலும் கவிதை வேண்டுமெனில்
உன் கண்களைத் தா என்கிறேன்.
அசலை வைத்து தானே நகல்கள் எடுக்க முடியும்.

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (31-Jul-17, 4:56 pm)
Tanglish : tharisanam
பார்வை : 324

மேலே