புன்னகைத்து அடுத்த கவிதைக்கான தொடக்கப்புள்ளி

அழகி உன் முகம் பார்த்து
ஒற்றைக்கவிதை எழுதி
முடித்தவுடன் ஒரு புள்ளி
ஒன்றை வைத்து விடுகிறேன் !

திரும்ப உன் முகம் பார்த்தவுடன்
மெல்லிதாய் ஒரு புன்னகை வீசி விடுகிறாய் !

அது முதல் கவிதைக்கான முற்றுப்புள்ளி
என நினைத்தால்
புன்னகைத்து அடுத்த கவிதைக்கான
தொடக்கப்புள்ளியாய் மாற்றி விடுகிறாய் !

எழுதியவர் : முபா (31-Jul-17, 4:39 pm)
பார்வை : 372

மேலே