வேசம்

தேனும் கசக்குதடி
தீங்கனியும் வெறுக்குதடி
உன் பூ முகம் கொல்லுதடி
புன்சிரிப்பு என்னை
உயிரோடு மெல்லுதடி

வாசமாய் வந்து என்னில்
சுவாசமாய் ஆனவளே
பாசம் கொள்வது போல்
வேசமிட்டு என் வாழ்வை
நாசமாக்கி விட்டுச் சென்றாயடி

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (3-Aug-17, 11:21 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : vaesam
பார்வை : 108

மேலே