மயிலிறகே மான்விழியே
மயிலிறகே ! மான்விழியே !!
மயிலிறகே ! மான்விழியே !
மன்னவனாய் வருவேனே !
மலர்ச்செண்டும் தருவேனே !
என்னுடைய இதயத்திலே
எந்நாளும் நீயன்றோ !
பொன்மகளே அழைக்கின்றாய்
பூவுலகில் அறிவேனே !
மன்மதனும் நான்தானே !
ரதிதேவியும் நீதானே !
மௌனமொழி வேண்டாமே !
கண்களினால் கவர்ந்திடுவேன்
காதலினால் உருகுகின்றேன் !!!
வெய்யோனின் சீற்றத்தை
வெறும் குடைக்குள் மறைக்காதே !
முந்தானைச் சேலையிலே
முகம் துடைத்தால் முழுதான
என் தாபம் தணிந்திடுமா ! சொல்வாயே !
பார்வையினால் கொல்லுகின்ற
பாதகத்தி நீயுமன்றோ !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்