நாடிமுடக்கும் ஆடிப்பிரிவு

சோலையில் விளைந்த சேலைகட்டி சாலையில் நுழைந்த தென்றலோடு நீ
பாலையில் கலைந்த மணல்முகட்டில் மாலையில் தழைந்த கள்ளியோடு நான்...
நகரம் ஒளிரும்நேரம் நளினமாக நகைத்தும்பேசும் நானும்சொல்வேன் நீயும் நாளும்கேளாதே
நரகம் துளிரும்ஓரம் கொடிய அமிலம் உமிழ்ந்துசெல்லும் அறியவயதும் உனக்குப்போதாதே...!
பயணபட்ட பொழுதும் எனக்கு பழுதாகி பாதியில்நிற்க
பாவப்பட்ட நிலவும் எங்கோ பால்வெளியில் தொலைந்துபோனது...!
பாதை எங்கென தேடித்தேடி ஓய்ந்தயெனை பாலையும் பாதாளத்தில் புதைக்காதிருந்தால்
ராதை உனைக்காண காலையில் மாலைகொண்டு வருவேன் எனக்காகநீயும் காத்திருந்தால்...
இருள்சூழ அச்சமில்லை இமைகள்கூட அயறவில்லை
கருப்பொருளாய் நம் காதலிருக்க விடியல்வரை நான் துயில்வதில்லை...