பறந்தேனே சிறகில்லாமல்
தென்னந்தோப்பிலே தெவிட்டாத தேனமுது
பண்கள் பல பாடியே அழைக்கின்றது குடிசை .
எண்ணமெல்லாம் வசந்தம் வீச எம்மருங்கும்
வண்ணமயமாய் வாசம் வீச உலாப் போகும்
தென்றாலாய் என்னவனுடன் கைகோர்த்தபடி
முன்னும் பின்னுமாய் நில்லாது இணையாய்
இதமாய் இயற்கையை ரசித்தபடி நிற்க
என் வீட்டின் மேலே பூத்த ரோசா மலர்
கண் சிமிட்டி அழைக்க எங்கோ பறந்த
சிட்டுக் குருவி பாடியபடி வரவேற்க
மனமெல்லாம் இன்பமயம் ! எடுத்துரைக்க
நேரமின்றி எங்கோ பறந்தேனே சிறகில்லாமல் !!!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்