மோக நிலவே

மோக நிலவே
மோக நிலவே
முழுவதும் மறைந்துவிடு
தேகத்தின் உள்ளே!
தேடி வரும் நேரம்
இது இல்லை!!

மஞ்சல் சூரியன்
மறையவில்லை
மாலைவேளை
முடியவில்லை
அதற்க்கு முன் நீ
மூச்சுவிடாதே,

மங்கல இசையில் இன்னும்
எந்த மனமும் மயங்கவில்லை!
அதற்க்கு முன்
மயங்கி வராதே நீ,

இரவானது தாயாரான பின்பும்
இன்னும் ஒரு இதயம்
இங்கு
தயங்குகின்றது!
தடுமாறுகின்றது!!
தவிக்கின்றது!!!
தவிக்கவிடாமல் கொஞ்சம்
தள்ளிப் போய் விடு,

விடுகதை என்று
வந்து மறையும் வின்மீனும்
விடாமல் கண்டு கொண்டிருக்கின்றது!
விழிகள் பாயத் துடிக்கும்
வெட்க்கத்தினைக் கண்டு!!
வெட்கம் விட்டு
வெளியே சென்றுவிடு
வேளிகள் அருகில் உள்ளது!!,

சொற்க்களைக் கண்டு
சொக்கி நின்ற சூரியனும்
சுடாமல்போனது!
அப்போதும் தாகம் அதனை
சூழ்ந்து நின்றது!!,

ஒளிகள் மறைந்து
கொண்ட பின்பும்
ஒலிக்கின்றது
ஒரு ஓவியத்தின் உருவம்!
அப்போதும் ஒரு நிலவு
அதனை கண்டு உருகும்...
............................................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (4-Aug-17, 7:00 pm)
Tanglish : moga nilave
பார்வை : 165

மேலே