வலி
எதிர்பாராத அழைப்பு
பாப்பாவிடமிருந்து
அழைத்தது அவள்தான்
ஆனாலும் எதிர்முனையில் அமைதி
இதயத்தில் மட்டும் ஓர் புயல்
ஈன்ற கன்றாய் -என்
உயிர் துடிக்கிறது அவளின்
ஊடல் தேடி
என்னவளே எங்கிருக்கிறாய் என
ஏகாந்தம் முழுதும் அலைந்தவன்
ஐயத்தோடு அழைக்கிறேன்- பாப்பாவென
ஒரு நிமிட நிசப்தம்
ஓவென கதறும் ஒலியோடு அறுப்படுகிறது-மன
ஔதாவில் மீண்டும் உன் நினைவு வலியாக...