எடைக்குப் போட்டால்
அலட்சியமாக குப்பைகளை ரோட்டில்
எரிந்து விட்டு,
பிளாஸ்டிக் குப்பைகளை
பசியில் எடைக்குப் போட
பொறுக்கும் ஒரு
வயதானவரை
பார்த்து சொல்கிறான்
குப்பை பொறுக்குறவன்
வந்துட்டான் என்று,
அவர் சொன்ன பதில்
நீங்க சாப்பிட்டு விட்டு
இந்த குப்பைகளை
ரோட்டில் போடுறீங்க,
நாங்க இந்த குப்பைகளை
பொறுக்கி அதை
எடைக்குப் போட்டால்
தான் எங்களுக்கு
சாப்பாடு,
இதே சிங்கப்பூர்
ஆக இருந்திருந்தால்
நீங்கள் சிறையில்
இருக்கும் போது
நான் இவ்வாறு
கூறி இருப்பேன்
"குப்பைத் தொட்டியில்
குப்பையை போடாமல்
சிறையில் கிடக்கிறான்
முட்டாள்."