அம்மா
அம்மா .. அம்மா ... அம்மா ...
உனக்குள் தொடங்கி
உன்னோடு தான்
என் உலகம்
சுழல்கிறது ... !
உந்தன் பெருமூச்சில்
என்னை தென்றல்
தொடுகிறது !
உன் பசிகளின்
இடிகளில் தான்
என் வானமே
பொழிகிறது !
என் ஆசைகளில்
உன் தேவைகள்
மறைகிறது !
என் தேடல்களில்
உன் முகவரி
தொலைகிறது !
உன் உறக்கமற்ற
இரவுகளில்
என் கனவுகள்
நடக்கிறது !
உன் உறுதியிலே
என் நாளை
பிறக்கிறது !
உன் சிறைக்குள் தான்
என் சுதந்திரம்
துளிர்க்கிறது !
உன் பாடுகளில்
என் பாடம்
விரிகிறது !
உன் கண்ணீர் கடலில்
என் வாழ்க்கை படகு
மிதக்குதே ..!
நான் வீசும்
வலையில்
மாட்டும் சிறுமீனாய்
ஒரு புன்னகை
தா ..... தாயே !