ஏழையின் கண்ணீர்
ஏழை என்ற இனத்தின் பசி தீர வேண்டும்,
பணம் என்ற காகிதத்தின் மோகம் அகல வேண்டும்,
ஏழைகள் மீது பற்றிய கட்டு மீள வேண்டும்,
இன்பமெனும் சோதி குடில்தோறும்
எரிய வேண்டும்,
ஏழையின் மீதுள்ள தீண்டாமையை
தீயிட்டு பொசுக்க வேண்டும்,
கால்வயிற்றுக் கஞ்சிற்கு நாள்முழுக்க உழைக்கும்,
உழைப்பாளியின் கண்ணீர் துடைப்போம் வாரீர்!!!