துள்ளுவது எல்லாம் மான் அல்ல ( மான் 1 )
முகில் நிறம்
விழியில் வெளிச்சம்
ஒரு வெகுளித்தனம்
வெள்ளைச் சிரிப்பு
அந்திக் கருமையின்
அதிசயா வடிவம்
அவள் சோள கொண்டையை
பல்லால் கடித்தபடி வயல் வெளியெல்லாம்
துள்ளி திரிந்த போது
எனக்கு ஒன்று புரிந்தது
துள்ளுவது எல்லாம் மான் அல்ல
---கவின் சாரலன்