பெண்

பெண் என்றால்
பெருமை என்பேன் !
பெண் என்றால்
பெருமை என்பேன் !
மனையை ஆள வந்ததால் -உன்னை
மனைவி என்பேன் !
இல்லத்தை காக்க வந்ததால் -உன்னை
இல்லத்தரசி என்பேன்!
கணவனுக்கு என்றும்
துணை நிற்பதால் -உன்னை
நல் துணைவி என்பேன் !
புகுந்த வீட்டில் நீ ஒரு மகளாய்
மாறுவதால் - உன்னை
மருமகள் என்பேன் !
பத்து மாதம் உன் வயிற்றில்
கருவை சுமப்பதால் - உன்னை
தாய் என்பேன் !
அழும் குரல் கேட்கும் முன்னே
வாரியணைத்து உச்சி மோர்ந்து
பசியறியா பால் தந்து -மழலையை
உறங்கவைக்கும் -உன்னை
அம்மா என்பேன்
மகளாய்
மனைவியாய்
தாயாய்
மாமியாராய்
பாட்டியாய்
எத்தனை பரிமாணங்கள் -நீ
எடுப்பாய்
பெண்ணே உனக்கு என்றும்
பெருமை என்பேன் !
மொத்தத்தில் நீ எனக்கு
என்றும் தெய்வம் என்பேன் !

எழுதியவர் : ரமேஷ் . நா (10-Aug-17, 11:09 am)
Tanglish : pen
பார்வை : 118

மேலே