கிழிந்த ஆடை

மனிதக் குலமே
எனக்கு
ஒரு சந்தேகம்..
ஆடை என்பது
எதற்காக..

பார்ப்பவரை கவர்வதற்காக
தேகத்திற்கு அணியும்
அலங்காரப் பொருளோ..

இல்லையென்றால்
மனித கண்டுபிடிப்புகளில்
இதுவும் ஒன்று என்று
பயன்படுத்துவதோ..

அதுவும் இல்லையென்றால்
மானம் காக்க
உடுத்திக் கொள்ளும்
கவசமோ..
எது எப்படியோ
தெரியவில்லை..

அந்த தெரு ஓர
குப்பைத் தொட்டியில்
காகிதம் பொறுக்கும் சிறுமி
அணிந்திருக்கும் ஆடை
எதற்காக தெரியுமா..

அலங்காரத்திற்காகவோ..
மனித கண்டுபிடிப்பிற்கு
மரியாதைக் கொடுக்கவோ
அல்ல..
மானம் காக்க
உடுத்தியிருக்கிறாள்..

இருந்தபோதிலும்
அவளின் கற்பு
எட்டிப் பார்க்கிறது..

அவளின்
கிழிந்துப் போன
அழுக்கு ஆடையில்..

எழுதியவர் : ஆர்.சரண்யா (10-Aug-17, 1:22 pm)
Tanglish : KILINTHA adai
பார்வை : 283

மேலே