என் வாழ்க்கை

உதிர்ந்து செல்லும் நொடிகளை
என் உதிரம் கொண்டு மாற்றுகிறேன்
என் வாழ்க்கையை
சிறு காயத்திற்கே அழுது
ஊரைக் கூட்டியவன் நான்
ஆனால் இன்றோ தினமும்
பல வெட்டுகள் காயங்கள்
மறத்துக் கொண்டிருக்கிறது என்
உடலும் உள்ளமும்
பட்டை தீட்டபட்ட
வைரத்திற்கு தான் மதிப்பு
அதுபோல என் வாழ்க்கையும்
பட்டைதீட்டபடும் காலம் இது
என்றோ ஒருநாள்
மதிப்பும் உயர்வும் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில். .

எழுதியவர் : நாகா (10-Aug-17, 11:41 pm)
Tanglish : en vaazhkkai
பார்வை : 514

மேலே