நீ இருக்கும் நெஞ்சம்

நதியே
நீ வேறெங்கேனும் போ என்று
விட்டுவிடாது
கடல்

நிலவே
நீ உறங்க இடமில்லையென்று
சொல்லிவிடாது
வானம்

உன் அன்பை
எவரோடும்
பகிர்ந்துகொள்ள முடியாத
சுயநலக்காரன் நான்
எப்படி பொய் சொல்வேன்
என் நெஞ்சில்
நீ இல்லையென்று !

@இளவெண்மணியன்


Close (X)

0 (0)
  

மேலே