இருள் முடியும் விழி மூட மறுத்து

இருள் மூடியும் விழி மூட மறுத்து தொடரும்
மனபோராட்டத்தில் நான் குழம்பி தவிக்கிறேன்
ஊரே உறங்கியும் அமைதியற்று விழித்து பார்க்கும்
நட்சத்திர கூட்டத்தில் தான் நானும் கலந்துபோகிறேன்

பனித்துளியில் குளித்த புல்லாகினேன் பின்
தானே வெயிலில் காய்ந்த சருகாகினேன்
மழைத்துளியில் குளித்த இலையாகினேன் பின்
நானே அதிலே உதிர்ந்த பூவாகினேன்

உன் நினைவுகளின் சுகத்தில் சிரிக்கிறேன் பின்
அதுதானே தரும் ரணத்தில் கொஞ்சம் அழுகிறேன்
உன்னை என்னவனாக்கி வரைந்து பார்க்கிறேன் பின்
ஏனோ அதை என் விரல் கொண்டே அழிக்கிறேன்

(இருள் முடியும் விழி மூட மறுத்து ...)

உனக்கும் எனக்கும் இடைவெளிகள் வேண்டாம் என நினைக்கிறன் பின்
நானே அதில் எல்லை கோடுகள் வரைகிறேன்
நம்மிடையில் எவரும் வேண்டாம் என வேகமாக துரத்துகிறேன் பின்
தானே உயிர் தந்த உறவுகள் பக்கம் சாய்கிறேன்

உன் பார்வைகள் தாங்காது விழி தாழ்த்துகிறேன் பின்
நானே உனக்காக ஏங்கி தூங்காது புரள்கிறேன்
உன் நினைவுகள் வேண்டாம் என தூர வீசி தூங்க தொடங்குகிறேன் பின்
ஏனோ கனவுகளில் உன்னோடே கைகோர்க்கிறேன்

(இருள் முடியும் விழி மூட மறுத்து ...)

நீ வேண்டுமா வேண்டாமா விவாத மேடையில் மனம்
படுக்கையறை பட்டிமன்றம்அரங்கேறுகிறது தினம்

நடுவராக என் நிலை பார்த்து சிரித்து
தீர்க்குது என் தலையணை
விடு போதும் நாளை பாப்போம் என
தூங்க சொல்லுது என் போர்வை

நடுவில் நிலவையும் நட்ட்டாமையாக கொஞ்சம்கூப்பிடுது
என் ஜன்னல் திரைசீலை
விடாமல் பேசிக்கொண்டு எனக்கு துணையானது
தெருவிளக்கு வெளிச்சம்

உன்னை அளந்து பார்த்த அறிவு
உனை வேண்டாமென துரத்த பார்க்கிறது
தன்னை இழந்து தோய்ந்த மனசோ
உன்னை விடாம இறுக்கி பிடித்து கொள்கிறது

இருள் மூடியும் விழி மூட மறுத்து தொடரும்
மனபோராட்டத்தில் நான் குழம்பி தவிக்கிறேன்
ஊரே உறங்கியும் அமைதியற்று விழித்து பார்க்கும்
நட்சத்திர கூட்டத்தில் தான் கலந்துபோகிறேன்


யாழினி வளன்

எழுதியவர் : யாழினி வளன் (12-Aug-17, 4:22 am)
பார்வை : 457

மேலே