கோணல்கள்

ஒரு சேலை மூன்றாய் கிழிந்தது
மூன்றும் வேட்டிகள் ஆயின
மூன்றாய் ஆனதால்
முழுசாய் இல்லாமல்
துண்டுகள் ஆயின
மானம் மறைக்க முடியாமல்
அவமானப் பட்டன.

அசிங்கங்கள்
சிங்கங்களாய்
சீறத் தொடங்கின.
எத்தனை சீறியும்
எத்தனை கீறியும்
ஊறிய ஊழல்
மாறிடவில்லை.

நேர்படப்பேசச் சொல்லி
கோணல்களைக்
கூப்பிடுகிறார்கள்.

எல்லோரும்
நன்றாகச் சாப்பிடுகிறார்கள்
ஏழைகளைத் தவிர;
ஏழைகளின் பேரைச் சொல்லி.

எழுதியவர் : கனவுதாசன் (12-Aug-17, 3:32 pm)
பார்வை : 52

மேலே