இதயத்தில் விழுந்த முதல்மழை நீ
இருமுகம் கொண்ட நறுமுகை நீ -என்
இதயத்தில் விழுந்த முதல்மழை நீ
நிரந்தர அழகின் முகவரி நீ -என்
நிழலெனத் தொடரும் உயிர்த்துளி நீ
கனவுகள் வளர்க்கும் கனிமரம் நீ -என்
கவிதைகள் சிரிக்கும் மலர்வனம் நீ
உறவென இணையும் உயர்வரம் நீ -என்
உணர்வினை மீட்டும் புதுசுரம் நீ !
@இளவெண்மணியன்