சுதந்திர தினம்
சுதந்திர தினம்
அழகே உருவான அன்னை திருநாட்டில்
அந்நியன் கையில் அடிமைகளாக வாழ்ந்த காலம்
கண் சிவந்து கனல் தெறிக்கும் விழியுடன் சிலர்
கலவரம் செய்து ஆதிக்கத்தை சாடிட
அமைதியும் அகிம்சையும் ஆயுதமாக்கி
அந்நியரை விரட்டி விடுதலை பெற வழிவகுத்து
நம் நாட்டை நமதே யாக்கி உரிமையளித்து
உலகே வியக்கும் வண்ணம் பெருமையளித்து
மூவர்ண கொடியினை உயர்த்திய நாளிதுவே!!!