127- கறக்கிற மாடு
No. 1 :- அண்ணே பட்டணத்தில நீங்க என்ன வேல பாக்குரீங்க
No.2 :- நீ இந்த பட்டிகாட்ல பாக்கிற வேலைய நான் பட்டணத்தில பாக்குறேன்டா
No. 1:- என்ன சொல்றீங்க நான் இங்கே பால்காரனா இருக்கேன் நீங்களுமா
No. 2:- ஆமாண்டா நீ ஒவ்வொரு மாட்லேயும் பால கறக்கிற பணம் பண்ற
No. 1:- அப்போ உங்களுக்கும் அங்க மாடுங்க இருக்குங்கிறீங்க
No. 2:- எனக்கு ஏமாளிங்க கோமாளிங்க இளிச்ச வாயனுங்கதான் நான் கறக்கிற மாடுங்கடா
No. 1:- அப்போ மொள்ளமாரி முடுச்சவிக்கி வேல பாக்கிறீங்கன்னு••••
No. 2:- அட ஆமாண்டா
No. 1:- இது ஒரு பொழப்பாண்ணே அதவிட தூக்கு போட்டுகிட்டு சாவலாம்ண்ண
No. 2 :••••••••••••••••!!!!!!!