சொற்கள்-எதிர் சொற்கள் ஒரு சிறிய அலசல்

மொழியைத்தந்த இறைவன்
சொற்களால் ஆன ஒலியலை
மொழியென்று காட்டினான்
சொற்கள் தந்த அவன்
சொற்களுக்கு எதிர்ச்சொற்களும் தந்தான்

மெய்யுக்கு பொய்யும்
நட்புக்கு பகையும்
இன்பத்திற்கு துன்பமும்
என்று நீள்கிறது பட்டியல்
இத்தனை ஏன் -அந்த
இறைவன் என்னும் சொல்லுக்கு
சாத்தான் எதிர்சொலானதே !

இப்படி எதிர்ச்சொற்கள்
ஏன் தந்தான் என்று சற்று
யோசித்து பார்த்தால் ..............
உண்மை ஒன்று புலப்பட்டது
ஐயா! கடவுள் இல்லையென்றால்
ஏன் அப்படி கூறினீர் என்று கேள்வி எழ
நாத்திகனும் இல்லையென்று கூறியது
ஏன் என்று ஆராய்ச்சியில் இறங்க
கதிகலங்க இறுதியில் நீயே கதி
என்று அவன் பாதம் சரண்..........
நண்பன் நட்புக்கு எடுத்துக்கொண்டோமானால்
நல்ல நண்பர்கள் ஒரு போதும்
ஒருவர் மீது ஒருவர் பகை கொள்ளார்
அவர்கள் நட்பும் அப்படியே -பின்னர்
பகைவர் யார் என்று கேட்டபின்
நண்பன் போல் நடிக்கும் நயவஞ்சகன்
என்பது புலப்படும்

ஆறறிவு மனிதனுக்கு தந்து
விலங்கினத்திடமிருந்து பிரித்து வைத்தான்
மனிதனை பேசவைத்தான்,எழுத வைத்தான்
ஆறாம் அறிவை பயன்படுத்த எல்லாம் அறிவை
எட்டி தேவனாகிவிடுவான்
இறைவனை தன்னுள் கண்டு

இது அத்தனையும் வந்து சேரும்
சொற்கள்,எதிர்ச்சொற்கள்
ஆராய்ச்சி செய்ய ..................

முயன்று பார்க்கலாமே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Aug-17, 12:22 pm)
பார்வை : 748

மேலே