துளிப்பாக்கள்
காதலர்கள் ஓடிப்போவது கெட்டது.
நகரில் இருக்கும் திருமண மண்டபம்
வாடகைக்கு விடவே கட்டப்பட்டது!
***
சலவைக்கு இட்ட நொடி
சாயம் வெளுத்தது. வாக்குறுதி
பூசிய கட்சி கொடி
***
பிரச்சாரம் செய்த களைப்பு
பாராளுமன்றம் சென்றும்
வாய் திறவாத தலைவர்.
***
மழைவேண்டி யாகம்
வேள்வித் தீ எரிய செய்திருந்தன
மரங்கள் தம்மை தியாகம்
*மெய்யன் நடராஜ்