என் காதலில்
![](https://eluthu.com/images/loading.gif)
நான் என்று ஏதும் இல்லை என் காதலில்...
நாம் என்று உரைக்க அவன் இல்லை என் காதலில்..
கனவுகள் மட்டும் ஆயிரம் உண்டு என் காதலில்...
இமைகள் மூட நேரம் இல்லை என் காதலில்...
கண்ணீருக்கோ பஞ்சம் இல்லை என் காதலில்..
அவன் அறிய நான் சொல்லவில்லை என் காதலில்...
அவன் அறியான் என்று எண்ணவில்லை என் காதலில்..
காலங்கள் முடியவே இல்லை என் காதலில்..
என் கல்லறை தூரம் இல்லை என் காதலில்..
நான் என் காதல் உரைக்க.......
அதற்கு அவன் செவி சாய்க்க....
ஒரு நொடி வேண்டும்..
என் காதலில்......