காணாத என் காதல்

அவன் முகம் பார்த்து வருடங்கள் பத்துக்கும் மேல் இருக்கும்...
அவனை நினைக்கமால் கடந்த நொடி இல்லை....

எண்களின் அருமை உணர செய்தான்...
அவன் கைபேசி எண் என்னிடம் இல்லாமல்...

முகவரி இல்ல முகநூலில்...
அவன் முகம் தேடி நான் அலைந்தேன்.....

முதல் உரையாடலில் நான் உணர்ந்தேன்..
அவன் எண்ணத்தில் நான் இல்லை என்று....

என் எண்ணத்தில் அவன் இருந்தால் அழித்திருப்பேன் ...
என் எண்ணமாகவே அவன் தானே இருந்தான்,,,

விடாமல் என் சிந்தையின் பின்னால் ஓடினேன்..
என் பிரியத்தில் பிழை இல்லை என்று.....

அதிகமாய் பேசும் நான்...
அடிக்கடி உமையானேன் அவனிடம்....

ஆண்டுகள் பல ஓடிய பின்
அவன் முகம் பார்த்தேன் ஒரு நாள்...
எப்படி உரைப்பேன் அந்த ஒரு நொடியின் இன்பத்தை...

அழகான அந்த பத்து நிமிட உரையாடல்..
எனக்கென பெய்த அந்த ஒரு நிமிட மழை..
கடந்து சென்று விட்டான் அடுத்த நொடியில்..
துடித்து எழுந்தேன் தூக்கத்தில் இருந்து...
காணாத என் காதல் கனவில் மட்டும் தான்..

கண் மூடி கண்ணீர் வடித்து தூங்க சென்றேன்.....
கனவுகளில் மட்டும் என்ன அங்கும் கண்ணீர் தான்..
அதுவும் வலிக்கவில்லை அவனிடம் நான் பேசும்..
ஒரு மொழி அது தானே....

எழுதியவர் : நான் (20-Aug-17, 9:53 am)
சேர்த்தது : Kavitha
பார்வை : 178

மேலே