வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
எனக்கென தனி வீடு
ஒரே ஒரு அறை மட்டும்...
யாரும் இல்லா இடத்தில அமைக்க வேண்டும்...
அந்த ஒரு அறை முழுதும்
அவன் புகைப்படம் மட்டும் வேண்டும்
அவனுடன் நான் பேசிய வார்த்தைகள் வரையப்பட வேண்டும்...
திரும்பும் இடம் எல்லாம் அவனை நான் காண வேண்டும்..
எனக்கென தனி உலகம் வேண்டும்..
அந்த உலகம் முழுதும் அவன் முகம் வேண்டும்..
நான் சுவாசிக்கும் காற்றில் கூட அவன் வாசம் வேண்டும்...
ஒரு பெரிய திரையாய் அந்த வானம் வேண்டும்..
அதில் எங்கள் நாள்கள் மட்டும் திரையிட வேண்டும்...
நான் பேசும் மொழி அவன் அறிய வேண்டும்...
என்னிடம் மட்டும் பேசும் அவன் வேண்டும்...
என் முகம் அவன் மட்டும் காண வேண்டும்..
அது மட்டும் போதும் என அவன் வேண்டும் ..
ஒரு நொடி கூட இமைக்கா இமை வேண்டும்..
கண் முன் அவன் மட்டும் வேண்டும்..
அழகான அவன் புன்னகை வேண்டும்...
அதில் என்னை நான் தொலைக்க வேண்டும்..
மழை போல் கண்ணீர் நான் வடிக்க வேண்டும்...
அவன் விரல் மட்டும் அதை துடைக்க வேண்டும் ...
மௌனம் மட்டும் பேசும் அவன் வேண்டும் ...
மௌனத்திலும் அவன் என்னை மட்டும் பேச வேண்டும்...
இது ஏதும் இல்லை என்றாலும்...
அவன் மட்டும் எனக்கென வேண்டும்......