என் கேள்விகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆயிரம் காரணம் நீ உரைத்தாய் என்னை பிரிய..
ஒரு காரணம் உன்னிடம் இல்லையா அன்பே........
என்னை சேர?????
நிறைவேறாத ஆசை நீ என்று வாழ்ந்தேன் நான்..
நிறைவேற நம்பிக்கை தந்தாய் நீ..
இப்பொழுது மட்டும் நிறைவேறாத ஆசையாய்..
என்னை ஏன் ஏற்றாய்???
பதினைந்து வருட என் கனவிற்கு..
பதினைந்து நாள்களில் பதில் அளித்து விட்டாயே...
இது சரி தானா?
நான் உரைக்கா என் காதல் நீ அறிவாய் என்று நினைத்தது
என தவறு தான்.. ஒரு முறை உண்மை சொல்...
நீ அறிவாயா என் காதல்???
ஒவ்வொரு முறையும் உன்னிடம் சொல்ல
முயற்சித்து தோற்ற என் காதலை..
உணர்ந்தாயா ஒரு முறையாவது???
மரணிக்கும் என் வார்த்தைகளிடம்...
மன்றாடும் என் காதல்..
நான் மறைந்தாலும் மறையாது....