வண்டி நிறைய

வண்டி நிறைய...
=================================ருத்ரா

வாழ்க்கை என்பது
"பொக்கிஷப்பெட்டி" என்றால்
"பழம் நினைவுகளே" பொக்கிஷம்.
பழையதை தூக்கியெறி என்றால்
அந்த காலிப்பெட்டியை
சுமப்பதே பெரும் சுமை.
பாரம் எவ்வளவு?
ஆயிரம் டன்னா? ரெண்டாயிரம் டன்னா?
கனவுகளுக்கும் கண்ணீரும்
ஒரு தட்டில்
பிறப்பு மறு தட்டில்.
இறப்பு எனும் தராசு முள்
செங்குத்தாய் நிற்பதற்குள்
இங்கு வாழ்கையின்
கடல்களும் மலைகளுமே
சினிமா செட்டிங்ஸ்!
வண்டி நிறைய தத்துவங்களில்
நசுங்கிக்கிடப்பதே உள்ளம்.

=================================


Close (X)

5 (5)
  

மேலே