பைத்திய சாலை
ஐயோ பைத்தியம்...
பைத்தியம்...
தினந்தோறும் கொண்டாடப்படுகிறது விழாக்கள்...
தினந்தோறும் நல்ல நாள்கள் தான்...
இருப்பினும் மணம் முடிக்க, வீடுகட்ட ஆரம்பிக்க, இடம் வாங்க, கார்க்கு பூசை போட என்று எதற்கெடுத்தாலும் நல்ல நாட்களைத் தேடியலையும் பைத்தியலோகமிது...
கேளீர் பைத்தியங்களே...
நல்ல நாள் பார்த்து சுபலக்ணத்தில் மணம் முடித்தாலும் மனமுறிவு ஏற்படாதவரையே மணவாழ்க்கை...
நல்ல நாள் பார்த்து வீடுகட்டத் தொடங்கினாலும் விரைவாக முடிக்க தொழிலாளர்களின் சுறுசுறுப்பும்,
அக்கட்டிடம் நிலைத்திருக்கப் பயன்படுத்திய பொருட்களின் தரமுமே காரணம்...
ஒவ்வொரு செயலும் சிறப்புறக் காரணமுண்டு...
நாளும் நேரமும் பார்ப்பதே மூடத்தனம்...
இதைவிட பைத்தியக்காரத்தனம் வேறில்லை...
பணத்தை நோக்கி ஓடும் பைத்தியங்களே,
ஆடம்பரம் உங்களுடைய நோயை இன்னும் அதிகமாக்க,
செய்வதையே செய்கிறீர்கள்,
சொல்வதையே சொல்கிறீர்கள் பைத்தியம் முற்றிய மாந்தர்களாய்...
உங்களை பைத்தியமென்றிட நானொரு பைத்தியமென்று கடந்திருந்தனர் பணக்கார பைத்தியங்கள்...
ஏழ்மையை போக்குவதில் ஏழை பைத்தியங்கள்...
அன்பு தேடும் பைத்தியங்களே வைத்திய சாலையில்...
மற்ற பைத்தியங்களெல்லாம் உலகமென்ற பைத்தியசாலையில்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
