தேன்சிட்டுகள்

தேன்சிட்டின் குடில்கள் தொங்கிக் கொண்டிருந்தது
அந்த மின்வேலிக் கம்பிகளில்.
உள்நுழைந்த படியும் வெளியே பறந்தபடியும்
சிட்டுக்கள் சிலிர்த்துப் பறந்தன...
யாதொரு தீண்டலுமின்றி அதன் குடில்கள்
இன்றும் அங்கேயேதான் தொங்குகிறது.
அதில் வாழ சிட்டுகள் தான் இல்லை
மெல்லலைகள் மென்றுவிட்டன அதனுயிரை
மனிதனின் சுவைக்காய்...

எழுதியவர் : ஆ.சத்தியபிரபு (25-Aug-17, 8:22 pm)
பார்வை : 61

மேலே