உயிர் பேசுகிறேன்

காண்டமோ கருத்தடையோ காலம் கடக்கும் முன் செய்து தொலையுங்கள்,
மேனிக்கவர்ச்சியோ,
ஹார்மோன் சேட்டையோ,
காரணம் என்னவோ கலவி ஒன்றுதான்,
விளக்கணைக்கும் ஆசையில் விதைத்த பின் வினையறுக்காதீர்கள்,
குப்பை கூட விலை போகும் குற்றமற்ற என் பிழை என்ன???
காமம் கடந்து கருவறுத்த பாவிகள்
சோகமின்றி சுற்றித் திரிய,
அசைவின்றிக் கிடக்கிறேன் அங்குமிங்குமாய்,
இச்சைகளால் விட்டுச் சென்ற எச்சங்களின் மிச்சமாக நான்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (25-Aug-17, 8:53 pm)
Tanglish : uyir pesukiren
பார்வை : 85

மேலே