தோற்றது நியூட்டன் விதி

[] தோற்றது நியூட்டன் விதி ...
---------------------------------------------------------------------

அம்மாக்கள் எனும் சுவற்றில்
பிள்ளைகள் -
அன்பு பந்தை எரியும் போதும்
கோப பந்தை எரியும் போதும்
ஏனோ தோற்று போகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி ..!

சமமான எதிர் விசை
என்ற விதிக்கு
ஒத்து போவதில்லை
அம்மாக்களின் செயல்பாடுகள் !

ஒரு மடங்கு அன்புக்கு
பல மடங்கு திருப்பி தருவதாலும்
பல மடங்கு கோபத்திற்கு
துளி அளவும் திருப்பி தராததாலும்
அம்மாக்களிடம் மட்டும்
தோற்றது நியூட்டன் விதி ..!


- யாழ் ...

எழுதியவர் : யாழ் கண்ணன் (25-Aug-17, 9:01 pm)
பார்வை : 409

மேலே