பெண் வீட்டார்
நாலு மறக்கால் நெல் விற்று நடுக் கழுத்துச் சங்கிலியாம்,
கடலைக் காடு இரையானது கல் மூக்குத்தியின் பிடியில்,
சினம் கொள்ள முடியவில்லை சீர் வரிசை கண்டு,
காலம் கடக்கும் முன் கரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தால்,
மாறா மனதுடன் மாப்பிள்ளை வீட்டார்,
மன்றாட இயலவில்லை மானம் காக்கும் பொருட்டு,
அனைத்தும் முடிந்ததென்று அசதியில் அமர்ந்தால்,
வரிசை கட்டி நிற்கின்றன ஆடியும் தீவாளியும்,
பேச ஏதுமில்லை,
பெண் பெற்று பிச்சைக்காரன் ஆனவர்களில் நானும் ஒருவன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
