சலிப்பு வேண்டாம்
எப்படியாவது யாரிடமாவது மனக்குமுறலை
சொல்லிவிடமாட்டோமா என ஏங்கிய வேளையில்
பொக்கிஷமாய் கிடைத்தது எழுத்து.காம்
அவளுக்கான உணர்வுகளை பகிர்ந்து கொள்ள
ஓரிரு நண்பர்களாவது கிடைப்பார்கள் என
இத்தளத்தில் இணைந்திருக்கிறாள்
மிக்க நன்றி...
என்னடா வாழ்க்கை நம்மை போல யாரும் கஷ்டப்படவே மாட்டாங்க
ஏன்தான் பிறந்தோமோ என்கிற சலிப்பு எல்லாரது வாழ்வையும் ருசிக்கவே செய்கிறது
அப்படி என்னதான் கஷ்டம்?---- உங்கள் கேள்வி என் காதில் விழுகிறது...
உங்கள் தோழிக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கலாமே?
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவள்
படபடவென்று பேசி திரிந்தவள்
பார்த்து பார்த்து பேசுகிறாள்...
மனதில் நினைத்ததெல்லாம் கேட்காமலே பெற்றவள்
அழுகை என்பதை ஒரு நாளும் அனுபவிக்காதவள்
அழுகையிலே ஆறுதலடைகிறாள்
அதனையும் நடிப்பு என சாடுகின்றனர் உறவினர்...
வாசலுக்கு செல்வதானாலும் ஓராயிரம் முறை கண்ணாடி முன் சிங்காரம் செய்தவள்
கண்ணாடியை மறந்து வாழ்க்கையை கழிக்கிறாள் ...
கன்னத்தில் விழும் குழிக்காக வே பல மணி நேரம் சிரித்தவள்
சிரிப்பை கூட அளந்து சிரிக்கிறாள்
ஆனாலும் சிரிப்பில்லாமல் கண்டதில்லை அவளை ஒரு நாளும்...
அவள் ஆசைப்படி நடந்தது திருமணம்
இதுவரையில் வேறு எதுவும் கிடைக்கவில்லை அவளுக்கு...
மீண்டும் சந்திப்போம்...