தமிழச்சி-தன்மானம்
இடை தெரிய உடை அணிந்து
கடையோரே நடை பாதையில்
நடை பழக நடப்பது போல் நீ நடக்க ,
கடந்து போன கயவர் கூட்டம்
கடத்தியது உன் கட்டுடல் மேனியை
அங்கு
களவு போனதோ உன் கற்பு
அற்ப அழகிற்கு
ஆடைகளை குறைத்தாய்
''ஓடையில் செல்லும் தண்ணீர்
ஊருக்கே சொந்தம்''
ஒருவனுக்கு மட்டுமே
என நினைத்தாயோ
ஆடைகளை குறைத்து
அங்கங்களை காட்டினை
அதன் விளைவு
பாதாளத்தில் விழுந்து பங்கமானது
உன் வாழ்க்கை.
தமிழ் பேசும் உனக்கு,
தாய்மார்களின் வேஷம்
நினைவிருக்கிறதா?
தமிழச்சியாய் பிறந்த நீ
காட்ட வேண்டியது அழகினை இல்லை!
''வீரம்''