உழைப்பாளர்களின் குரல்
உழைப்பாளிகளின் குரல் !
கவிதை by: பூ.சுப்ரமணியன்
‘எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்’
இடைவிடாமல் கூறியே
எங்களையெல்லாம்
ஏழையாக்கி விட்டீர்கள் !
உழைப்பாளர் சிலையில்கூட
உழைத்துக்கொண்டிருக்கும்
எங்களுக்கு
இலவசங்களை கொடுத்து
சோம்பேறியாக்கி
எங்கள் இதயத்தை
நொறுக்காதீர்கள் !
இலவசங்களுக்கு
விடை கொடுங்கள்
நாங்கள்
உழைத்து வாழ
வேலை கொடுங்கள் !
நாங்கள்
இந்நாட்டு மன்னர்களாக
இருக்க விரும்பவில்லை !
உழைத்து வாழும்
உழைப்பாளிகளாகவே
உண்டு வாழவே
விரும்புகிறோம் !
பூ. சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை