என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 17
ரம்யாவும் காயத்ரியும் பேசிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்தான் பிரவீன்.
பிரவீனை பார்த்த விஜியின் கண்கள், அவளது மனதிற்கு தகவலை தெரியப்படுத்த, முகத்தில் ஒருவித மலர்ச்சி விஜிக்கு.
"பிரவீன்.....நல்ல இருக்கீங்களா" என்றாள் விஜி.
"ஓ, நீங்களா. வாங்க விஜி...எப்போ வந்தீங்க, வரேன்னு சொல்லவே இல்ல?" என்றான் பிரவீன்.
ஆச்சர்யத்தில் ப்ரவீனும் திகைத்தான்.
"வாடா, நீ கொஞ்சம் கம்பனி குடு இவங்களுக்கு, நான் ஆனந்த பவன்க்கு போய் டின்னர் ஆர்டர் குடுத்தது என்ன ஆச்சு, எத்தனை மணிக்கு வரும் னு கேட்டுட்டு, அகர்வால் ல கேக் ஆர்டர் தந்ததை வாங்கிட்டு வந்துடறேன்." என்று கூறிவிட்டு விஜய் உத்தரவு வாங்கிக்கொண்டான்.
"சரி டா" என்றபடி அவர்களின் அருகில் உட்கார்ந்தான் பிரவீன்.
அருகில் விஜியும் அமர்ந்தாள்.
விஜியுடன் பேச ஒரு நல்ல சந்தர்ப்பமாக உணர்ந்தான் பிரவீன்.
"பிரவீன், ஒரு சஸ்பென்ஸா இருக்கட்டும் னு தான், உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம்" என்றாள் விஜி.
"எனக்கு கூட உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோசம், ரம்யாவை பாத்ததுலயும் ரொம்ப சந்தோசம். அது சரி, இது யாரு" என்றபடி காயத்ரியை பார்த்து கேட்டான் பிரவீன்.
"ஓ மறந்துட்டேன், இது என் பிரென்ட் காயத்ரி, க்ளோஸ் பிரென்ட். சின்ன வயசுல இருந்து ஒண்ணா படிக்கிறோம், எங்க தெருவுக்கு அடுத்த தெருல தான் இவ வீடு இருக்கு, நல்லா படிப்பா, எனக்கு ஈக்வலா போட்டி போட்டு படிக்கிறவ, படிப்புல போட்டி ஆனா பெஸ்ட் பிரென்ட்" என்றாள் விஜி.
"ஓ வெரி குட்.நைஸ் டு மீட் யு" என்றான் பிரவீன்.
"நைஸ் டு மீட் யு டூ" என்றாள் காயத்ரி.
"சரி அப்புறம் சொல்லுங்க, அம்மா எப்படி பர்மிஷன் குடுத்தாங்க" என்றான் பிரவீன்.
"அதுவா...எல்லாம் விஜி பக்காவா பிளான் போட்டு பர்மிஷன் வாங்கிருவா" என்றாள் ரம்யா.
"ஓ, பயங்கரமான ஆளா விஜி" என்றான் பிரவீன்.
"ஆமாம், அது மட்டும் இல்ல, விஜி மேல அவங்க வீட்ல எல்லாருக்கும் புல் நம்பிக்கை, ரொம்ப மெச்சூர்டான பொண்ணு. எங்க அப்பாவே விஜி கூட போறேன் னு சொன்னா உடனே பர்மிஷன் குடுத்துடுவாரு." என்றாள் காயத்ரி.
"ஓ அவ்ளோ பெரிய ஆளா விஜி" என்றான் பிரவீன்.
"பட் விஜிக்கு நான் தான் செல்லம், எனக்குன்னா உடனே எல்லாம் செய்வா, சின்ன வயசுலேந்து எனக்காக நெறய விட்டு குடுத்துருக்கா. சோ நைஸ் அக்கா"என்றாள் ரம்யா.
"ஆனா பயங்கர கோவக்காரி, கோவம் வந்துச்சு.......சாமி ஆடிடுவா" என்றாள் காயத்ரி.
"ஏய், போதும் நிப்பாட்டுங்க ரெண்டு பெரும், போங்க போய் அந்த கார்டனை சுத்தி பாருங்க, நான் பிரவீன் கூட பேசிட்டு இருக்கேன்" என்றாள் விஜி.
"பேசும்மா, பேசு...நீங்க வாங்க காயத்ரி அக்கா, நம்ம வெளில போய் அந்த கார்டனை சுத்திபாக்கலாம்" என்றபடி காயத்ரியை கூட்டிக்கொண்டு வெளியே சென்றாள் ரம்யா.
"ம்ம், இப்போ சொல்லுங்க பிரவீன், நார்மலா ஆயிட்டீங்களா"என்றாள் விஜி.
"என்னங்க நார்மல் ஆகறது, அம்மா ப்ரத்தி இல்லாம என்னமோ போல இருக்கு. ஆனா இந்த பிரெண்ட்ஸ் மட்டும் இல்லன்னா நான் அன்னிக்கே சூசைட் பண்ணிட்டு இருந்திருப்பேன். "என்றான் பிரவீன்.
தன்னையும் மீறி தன் கையால் பிரவீனின் வாயை மூடினாள் விஜி.
உடனே சுதாரித்துக்கொண்டு கையை எடுத்துவிட்டு, "ஏன் அப்படி எல்லாம் பேசறீங்க, கடவுள் எல்லாத்துக்கும் ஒரு வழி கொடுப்பாரு பிரவீன்" என்றாள் விஜி.
அனால் விஜியின் கை பட்ட மாத்திரத்தில் பிரவீன் சிலிர்த்துப்போனான்.அவனும் சளைத்தவன் அல்ல, உடனே சுதாரித்துக்கொண்டு "கண்டிப்பா" என்றான்.
"சரி பிரவீன், வேற என்ன விஷயம்" என்றாள் விஜி.
"வேற என்ன...ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல.நீங்க வந்திருக்கீங்க, அதான் ஸ்பெஷல்" என்றான் பிரவீன்.
"நீன்னே சொல்லலாம், நீங்க வாங்கன்னு மரியாதை எல்லாம் வேணாம்" என்றாள் விஜி.
"சரி விஜி, முயற்சி பண்றேன்" என்றான் பிரவீன்.
"ம்ம்ம், சொல்ல மறந்துட்டேன், எங்க அம்மா உங்கள என் வீட்டுக்கு இன்வைட் பண்ணாங்க." என்றாள் விஜி.
"என்னையா....எதுக்கு" என்றான் பிரவீன்.
"சும்மா தான்" என்று விஜி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கே வந்தான் லெனின்.
"டேய் பிரவீன், ஒரு சின்ன ஹெல்ப் டா.நீ கொஞ்சம் பேட்டை வரைக்கும் போய் அங்க ஆர்.டீ.எஸ். ல ரெண்டு பெடெஸ்டல் பேன் எடுத்துட்டு வா டா, சொன்னா அவனே டாடா ஏஸ் ரெடி பண்ணி தருவான். கொஞ்சம் போ மச்சி." என்றான் லெனின்.
விஜியை விட்டு போக மனமில்லாமல்,"சரி டா" என்று கூறிவிட்டு "தோ வந்துடறேன் விஜி" என்று கூறிவிட்டு கிளம்பினான் பிரவீன்.
விஜிக்கும் என்னவோ போல் இருந்தது.இரண்டு நிமிடங்கள் தான், முபாரக் அங்கே வந்தான்."என்ன விஜி, தனியா உக்காந்து இருக்கீங்க, எங்க உங்க குரூப்" என்றான்.
"அவங்க வெளில அந்த கார்டன் ல இருக்காங்க." என்றாள் விஜி.
"சரி," என்றபடி அங்கே உட்கார்ந்தான் முபாரக். "சரி, உங்களப்பத்தி சொல்லுங்க" என்றான்.
"அண்ணா, அது ரொம்ப போர் அண்ணா, ஒண்ணும் பெருசா இல்ல, நீங்க பிரவீன் பத்தி சொல்லுங்க" என்றாள் விஜி.
ரம்யாவும் காயத்ரியும் அந்நேரம் அங்கு வரவே, அவர்களும் உரையாடலில் சேர்த்துக்கொண்டனர்.
"பிரவீனை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, நீங்க எங்க டீம் பத்தி தெரிஞ்சுக்கணும்," என்றபடி டீம் பற்றிய விபரத்தை சொன்னான்முபாரக்.
"ஓ, நீங்க கடலூர் டீம் கு வெளாடுறீங்களா அண்ணா"என்றாள் விஜி.
"ஆமாம், நான் தான் கேப்டனா இருந்தேன், பட் ப்ரவீனோட பெர்பார்மன்ஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு. அவன் எங்க எல்லாரையும் விட ஜூனியர் தான், பட் அவன் விளையாடி பாத்ததில்லையே நீங்க, அலற விடுவான் அப்போனான்ட்டை.நாங்க எல்லாருமே அப்படிதான், கடைசிவரை ஜெயிக்க போராடுவோம், டென்ஷாணாவோம், அவன் கூலா விளையாடுவான். ஆனா ஒவ்வொரு அடியும் பயங்கரமா இருக்கும். அதான், நானே என்கிட்டே இருந்த காப்டன்சிய அவனுக்கு குடுத்தேன், அவனுக்கு ஈடு குடுத்து ஆடறது நான், ரியாஸ்...அதோ இருக்கானே அவன், விஜய்.....அதோ அந்த கருப்பு சட்டை, லெனின்....வெற்றி அண்ட் கதிர்....அதோ இருக்காங்க பாரு அவங்க" என்றான் முபாரக்.
"ம்ம்ம், அந்த அண்ணா தான் சுனாமி வந்த அன்னிக்கு எங்க வீட்ல வந்து பிரவீன் அம்மா பத்தி சொன்னாங்க, அவங்க மெக்கானிக் தான" என்றாள் ரம்யா.
"ஆமாம், ஆமாம்" என்றான் முபாரக்.
"எல்லாத்துக்கும் மேல ரகு, எங்க எல்லாருக்கும் சீனியர் பிளேயர்.அட்வைசர்.நாங்க எல்லாருமே ரொம்ப திக் ப்ரெண்ட்ஸ், ஒருத்தனுக்கு ஒருத்தன் விட்டு குடுக்க மாட்டோம். நாங்க எல்லாருமே எல்லாரோட அம்மா அப்பாக்கு பசங்க தான். வெற்றி, கதிர், லெனின்...இப்போ பிரவீன் எல்லாருக்கும் யாரும் இல்லைன்னு நினைக்கவே கூடாது, அவங்களுக்கு நாங்க இருக்கோம், இருப்போம்"என்றான் முபாரக்.
"ஓ, கதிர் அண்ணா, வெற்றி அண்ணா லெனின் அண்ணா எல்லாருக்கும் பேரன்ட்ஸ் கூட பொறந்தவங்க இல்லையா" என்றாள் ரம்யா.
"இல்லம்மா, அவங்களுக்கு எல்லாமே நாங்க தான், அதும் இந்த ஆஸ்ரமம் இருக்கே, இங்கதான் லெனின் வளர்ந்தான். அதனால நன்றிக்கடனா அவன் சம்பாதிக்கிற எல்லாத்தயும் இங்க குடுத்துட்டு இங்கயே தான் இருக்கான். அவன் பெரிய ம்யூசிஷியன்.ஆனா அவனோட பாஸ்ட் லைப் ரொம்ப கொடுமை, அனாதையா கருவேல காட்டுக்குள்ள இருந்து எடுத்த புள்ள அவன்" என்றான் முபாரக்.
"என்னண்ணா சொல்றிங்க" அதிர்ச்சியானாள் காயத்ரி.
"ஆமாம், எங்க எல்லாரையும் ஒண்ணு சேத்தது இந்த கிரிக்கெட் தான், அதும் இந்த ப்ரவீனும் ரியாஸும் விஜய்யும் பயங்கர ஆளுங்க. வெறியனுங்க இந்த கிரிக்கெட்ல" என்றான் முபாரக்.
"அவரை பாத்தா அப்டி தெரியலையே, ரொம்ப சைலெண்டா சின்ன பையன் போல இருக்காரு" என்றாள் ரம்யா.
"யாரு...அவனா....ரியாஸ் கூட ஓகே, கொஞ்சம் பயப்படுவான், ஆனா இந்த பிரவீன் அண்ட் விஜய் இருக்காங்களே.......அப்பப்பாப்பா...பீல்டுல பாக்கணுமே அவனுங்க கோவத்தை, சம் டைம்ஸ் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவானுங்க.அது மட்டும் இல்ல, பிரவீன் பயங்கர ஓவர் கான்பிடண்ட்டு. இதுக்கே அவனுக்கு ரொம்ப நேரம் நின்னு விளையாடும்போது டெங்ஷனாகி பாடி ஓவர் ஹீட் ஆகி மூக்குல இருந்து ரத்தம் ஊத்தும்.அதெல்லாம் நாய் கேர் பண்ணிக்கவே மாட்டான்" என்றான் முபாரக்.
"அண்ணா, என் பிரெண்டோட அண்ணன் கூட விழுப்புரம் டீமுக்கு வெளயாடுறாரு, " என்றாள் விஜி.
"விழுப்புரம் டீம் கா? யாரும்மா அது?" என்றான் முபாரக்.
"அவரோட நேம் டேவிட், என் கிளாஸ்மெட்டோட அண்ணன்" என்றாள் விஜி.
"ஓ, டேவிட் ஆஹ், நல்லா வேகமா பால் போடுவான்மா, அவன் டீமே அவனை நம்பிதான் இருக்கு பவுலிங்க்ல, நானே அவன் பால் ல தெணறிடுவேன், ஆனா விஜய் பிரவீன் ரியாஸ் எல்லாம் விட்டு வெளுத்துடுவாங்க." என்றான் முபாரக்.
"அப்டியா, அண்ணா....நெக்ஸ்ட் எப்பவாச்சும் விழுப்புரம் ல மேட்ச் நடந்தா சொல்லுங்க, நானும் வந்து பாக்கறேன்" என்றாள் விஜி.
"என்ன நீ மட்டும்,நாங்களும் வருவோம்" என்றாள் ரம்யா.
சிரித்தான் முபாரக்.
அனைவரும் சிரித்தனர்.
சற்றுநேரத்தில் பிரவீன் வந்தான், விஜய் ஏனைய அனைவரும் வரவே லெனின் கூறினான் "ஓகே, இங்க வந்திருக்கற எல்லாருக்கும் தேங்க்ஸ். இந்த குழந்தைக்கு யாரும் இல்லை அப்படிங்கற பீலிங் இருக்கக்கூடாது என்பதற்காக, நான் தனியா இருந்தப்போ எனக்காக வந்த என் நண்பர்கள் இன்னும் என்கூட என் சுக துக்கங்களில் என்னுடன் தோள் கொடுத்து நிற்கும் எனக்கு உயிரும் வாழ்வும் அளித்த என் உயிர் நண்பர்கள் முபாரக் அலி, அவனது தந்தை, எங்க எல்லாருக்கும் வாப்பா, ரியாஸ், விஜய், என்னைப்போலவே நாதியற்று கடலூருக்கு வந்து எங்களோடு ஐக்கியமாகி எங்கள் உயிருக்குள் உயிரான கதிர், வெற்றி, எங்கள் எல்லாருக்கும் அண்ணன் ரகு, எங்க செல்ல பிள்ளை பிரவீன், எங்க எல்லாருக்கும் கம்ப்யூட்டர் சொல்லி குடுக்கும் எங்க ஹரி எல்லாருக்கும் தேங்க்ஸ், இப்போ இந்த ஆஸ்ரம குழந்தைக்கு பெயர் வைக்க, எங்கள் பதினோரு உயிரில் ஒரு உயிரான பிரவீனை கூப்பிடுகிறேன்" என்றான் லெனின்.
பிரவீன் இதை எதிர்பார்க்கவே இல்லை, "டேய்,, நான் என்னடா பேரு வெக்கிறது" திகைத்தான் பிரவீன்.
உடனே மைக்கை வாங்கி பேசிய விஜய், "கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்த சுனாமி ல எங்க ப்ரவீனோட அம்மாவும் தங்கையும் மரணமடைஞ்சுட்டாங்க, எங்க பிரவீன், அவங்கள இழந்தாலும் நாங்க எல்லாரும் அவனோட இருக்கோம் னு நெனைக்கறான், அப்படி அவன் நெனைக்கறது நிஜம் என்றால், இப்போ இங்க வந்து குழந்தைக்கு அவன் வாயால பேரு வெக்கணும், இது எங்க எல்லாரோட ஆசை" என்றான்.
சற்றும் யோசிக்காமல் எழுந்து நடந்தான் பிரவீன். மைக்கை கையில் வாங்கி "இங்க இருக்கற என் டீம் ல எல்லாராவிட சின்ன பையன் நான், ஆனா எல்லாரையும் வாடா போடா ன்னு கூப்பிடுவேன், ஆனா மனசால எல்லாரையும் உயிரா நெனைக்கிறேன், என்னோட பிரெண்ட்ஸ் சொல்ராங்க, நான் இந்த மழலைக்கு பேர் வெக்கிறேன், இது பெண் குழந்தை, இதற்கு" சற்று யோசித்துவிட்டு "விஜயலக்ஷ்மி" என்று பெயர் வைக்கிறேன் என்றான்.
அனைவருமே கைதட்டி கொண்டாடினர். விஜியின் கண்கள் ஆச்சர்யத்துடன் பிரவீனை இமைக்காமல் பார்க்க, ரம்யாவும் காயத்ரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
விஜியின் கண்கள் மெல்ல ஒரு சொட்டு நீரை வெளியே விட, அதை யாரும் பார்த்திட கூடாது என்பதை மனதில் கொண்டு தனது கைக்குட்டையால் உடனே துடைத்துக்கொண்டு கைகளை தட்டினாள்.
பகுதி 17 முடிந்தது.
--------------------தொடரும்-------------------