ஏனோ இது ஏனோ இது

ஏனோ இது ஏனோ இது
என் இதயத்தை கொய்தான் அவன்
என் தனிமையைக் கொன்றான் இவன்
எனக்கானவன்

ஏனோ இது ஏனோ இது
என் இதயத்தை கொய்தான் அவன்
என் தனிமையைக் கொன்றான் இவன்
எனக்கானவன்

உன் பார்வையில் தெளிகின்றவன்
உன் கூந்தலில் ஒளிகின்றவன்
உன் காதலில் புதிதாக எழுகின்றவன்

என் காலையில் கதிரானவன்
என் சாலையில் வழியானவன்
என் பாலையில் ஒருதுளி நீரானவன்

ஏனோ என்னை ஏங்கிப் போகச்
செய்தாய் உந்தன் தீயில் கொஞ்சம்
ஏனோ உன்னை வாங்கிக் கொள்ள
செய்தாய் எந்தன் விழிகள் கொண்டு
ஏனோ என்னைத் தூங்கிப் போகச்
சொன்னாய் உந்தன் விரல்கள் கொண்டு
ஏனோ என்னை தாங்கிக் தோள்
சேர்த்தாய் உன்னில் தானே தஞ்சம்

ஏனோ இது ஏனோ இது ....

உன் பார்வைகள் எனைத் தாண்டினால்
என் போர்வைகள் ஏன் போகுதோ
உன் வேர்வைகள் எனைத் தீண்டினால்
ஏன் கோர்வைகள் முத்து ஆகுதோ
உன் கார்முகம் தனை நோக்கினால்
ஏன் வேர்விழி ஏன் தாழ்கிறதோ
உன் நேர்மையும் அது வேண்டினால்
என் நேசமும் பூவென பூக்குமோ

என் கனவுகளை பறித்தானிவன்
ஏன் அலைகளை மறித்தானிவன்
என் கவிதைகளை தந்தான் இவன்
எனக்கானவன்

என் காலையில் கதிரானவன்
என் சாலையில் வழியானவன்
என் பாலையில் ஒருதுளி நீரானவன்



ரசித்த பாடலின் தாக்கத்தில் ,
யாழினி வளன்
யாரோ இவன் யாரோ இவன்...

எழுதியவர் : யாழினி வளன் (5-Sep-17, 9:01 am)
Tanglish : eno ithu eno ithu
பார்வை : 160

மேலே