உன்னை எண்ணியே

நிசப்த இரவுகள் !
துயில் துறந்த இரவுகள் !
பெரும்பாலும்
நட்சத்திரங்களை எண்ணியே
நிலவை ரசித்தே பழக்கபட்டுபோனவள்
நான் !
இப்பொழுதெல்லாம்
உறங்காத இரவின்
பொழுதின் அத்தனையும்
உன்னை எண்ணியே
உன் நினைவுகளை எண்ணியே
வாழ பழக்கப்படுத்தி விட்டாய் !