பிரிவு தந்த வலி

வந்துவிடுவாய்
என்றே
ஒவ்வொரு இரவும்
விடிகிறது.....ஏனோ
ஏமாற்றமாய்
முடிகிறது
என் நாட்கள்.....!!

யார் போட்ட
சாபம்
இது....கோபத்தை
மறந்த
குழந்தை இவன்
என்று
இருக்கையில்.....?!?!

அழகான
தருணங்கள்
எல்லாம்
தவறவிட்டு
விட்டேன்....அன்பே
உன்னையும்
என்
பிள்ளையையும்
கண்ணில்
காணாமல்
உருக்குலைந்து
போகிறேன்.....!!

பொல்லாத
உலகத்தில்
நீ
இல்லாது
வாழ்வது.....
வாழ்க்கையல்ல.....
வேதனையின்
எச்சங்கள்.....!!

ஏனடி
என்
வாழ்வு
தினம்
தினம்
சாவாச்சு.....???????
உன்னைத்தேடும்
கண்கள்
கண்ணீரைத்தானே
காண்பிக்குது......!!

மரணத்தை
ஒவ்வொரு
நொடியும்
கடந்து
போகும்.....என்
வாழ்க்கை
நெருங்கி
நெருங்கியே
போகிறது......உன்னை
சேராமல்......!!!

தவிப்பதும்
தத்தளிப்பதும்
இவனின்
சமகால
நிகழ்வாச்சு.....இவன்
உன்னைத்
சேராமல்
போகாது
என்
இறுதி மூச்சு......!!!!!!!!!!

எழுதியவர் : thampu (6-Sep-17, 3:16 am)
Tanglish : pirivu thantha vali
பார்வை : 1137

மேலே