ஆண் பெண் காதல்
அங்கமது
மோகமிலக்கி,
பாசமது பாவை
பூசிக்கொள்ள,
வண்ண வண்ண பூ பற்றி - அவர்
எண்ணம் பறக்கிறது சிறகடித்து!
இமைஇரண்டில் வெள்ளம்
கரைபுரள இருவிழியும்,
எதிர்நோக்கும் - இரவெல்லாம்
இன்பமாக்க ஈர்த்திடும்
தொகை தொகையாய்
தோகை விரிக்க,
தூவானம் தூளாக்கும்!
களிப்பாடும் கானமயிலாக
கவிபாடும் எண்ணமெல்லாம்
விருந்தோம்பல் தடையாகும் !
தேன்சுவையும்
தெவிட்டிவிடும் - கன்னல் கசப்பாகும்
கன்னமது கனியாகும்!
எல்லையொன்றை கடந்துவிடில்
எதுவாயினும் கசப்பாகும்,
அஃதே அமுதம் என்னவாகும்
இஃதே அவர் பிறவி என பொருளாகும்!
வெடித்து கிளம்பும்
வார்த்தையாவும் - நிழலாடும்
வேண்டும் வேண்டும்
அவன் தான்அவள் தான்
என்பதே சிலையாகும் !
எனவே காதல் என்பது சரியாகும் !