வானம் எழுதும் மழையெனும் கவிதை

வானம் அனுப்பிய
மழை கவிதை... இதன்
பல்லவி சரணங்களின்
சந்த நடையில்....
எதுகை மோனையின்
இன்பத் தாலாட்டில்
பூமி குளிர்கிறது
நெல்லையில் இப்போது...
கவிதை ஒருமணி
நேர வாசிப்பிலும்
நீளம் எனினும்
அலுத்திடவில்லை...
நந்தவனங்கள் இது
நல்ல கவிதை என
பசுமை நிறத்தில்
சான்றிதழ் அளிக்கும்
வருகின்ற நாட்களில்...
👍😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (8-Sep-17, 4:01 pm)
பார்வை : 203

மேலே