பொதிகை மின்னல் தந்த தலைப்பு வயல் கவிஞர் இரா இரவி

பொதிகை மின்னல் தந்த தலைப்பு !

வயல் ! கவிஞர் இரா .இரவி !

வானம் பார்த்த பூமி
விரிசல் விழுந்து வெடித்தன
வயல் !

பொன் விளையும் பூமி
புழுதிக்காடானது
வயல் !

வாழ்வாதாரம் இழக்கவைத்து
வாழ்வைப் பறிக்குது
வயல் !

பாயவில்லை காவிரி
காய்ந்தது
வயல் !

சோறுப் போட்ட பூமி
கூறுப் போட்டு வீடானது
வயல் !

பச்சையான பூமியும்
பாலம் பாலமாக
வயல் !

தண்ணீர் இன்றி
விக்கி நிற்கிறது
வயல் !

நாத்து நட
சேறு இல்லை
வயல் !

களை எடுக்க
கதிர்கள் இல்லை
வயல் !

வந்தது தொழிற்சாலை சாயம்
வீழ்ந்தது விவசாயம்
வயல் !

பறித்துவிட்டன
பன்னாட்டு நிறுவனங்கள்
வயல் !
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (10-Sep-17, 1:03 pm)
பார்வை : 142

மேலே