ஹைக்கூ சாரல் 15

வேப்பமர நிழலில்
மூச்சை வாங்கிக் கொண்டிருக்கிறது
ஒரு புல்லாங்குழல்
உயிரைக் கொடுத்து
உருவத்தைப் பெறுகிறது
புடவையில் பட்டாம்பூச்சி
பலூன் விற்பவர்
ஊதித் தள்ளுகிறார்
வாழ்க்கையை
ஊழல் பணத்தில்
உனக்கும் பங்காய்
ஒரு குவாட்டர்
முகவரி கிடைத்ததும்
அனாதையாகிப் போனார்
முதியோரில்ல பாட்டி
-மூர்த்தி eluthu sep9