அருவியின் முன் தோன்றிய வானவில்
பச்சை பசு மரங்கள்
செடிகள்,கொடிகள்
இவற்றால் போர்த்தப்பட்ட
அந்த மலைத்தொடரில்
உருவாகிய நதி
அந்த மலைத்தொடரின்
ஒரு மலையின்
மடி மீது-ஓ வென்ற
பெரு ஓசையுடன்
வந்து வீழ்ந்து
கொண்டிருந்தது
அந்தி நெருங்கும் சமயம்
ஆதவன் கதிரொளி
அந்த நீர்வீழ்ச்சியின்
முன்னே புகைமண்டலம்போல்
தோன்றிய மூடு பணியை ஊடுருவ
அச்சோ! அச்சோ ! அதை எப்படி சொல்வேன்
அந்த பேரழகை எப்படி சொல்வேன்
என் கண்முன்னே தோன்றியது
வண்ண வண்ண 'வானவில்'
விண்ணிலிருந்து மண்ணிற்கு
எப்படி வந்தாய் 'வானவில்லே' என்று
நான் அந்த வானவில்லை கேட்டு
நின்றேன் அண்ணாந்து பார்த்து
அதன் அழகில் மயங்கி
விண்ணிலிருந்து மண்ணில்
வந்திறங்கிய 'வானவில்'.