மீனவன்
விளக்கேத்தி காத்திருக்கிறாள் விடியும் முன் வருவானென்று.
விண்ணில் பறக்கும் பறவையை தூது சொல்ல அழைக்கிறாள்
வந்து வந்து போகும் அலைகளைக் கேட்கிறாள்.
சொல்லத்தான் ஆள் இல்லை அவன் சுடப்பட்டு விட்டான் என்ற சேதியை
நீலட்டும் இந்த இரவு, அவள் காத்திருப்போடு !!